
சன் டிவி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் திவ்யா ஸ்ரீதர். இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த அர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஒரு கட்டத்தில் அர்னவ் திவ்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்தும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக நள்ளிரவில் திவ்யா போலீஸிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறை அர்னவை சிறையில் அடைத்தனர். கொஞ்சம் நாட்களிலே வெளியே வந்த இவர் திவ்யாவை எட்டி கூட பார்க்கவில்லை.
இதனை தொடர்ந்து கர்ப்பமாக இருந்த திவ்யாவுக்கு சீரியல் குழுவினர்கள் சேர்ந்து அவருக்கு வளைகாப்பு செய்து வைத்து அழகு பார்த்தனர். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கொஞ்சம் மாதங்கள் ஓய்வில் இருந்த இவர், தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
பள்ளிகள் ஜூன் 12ம் தேதி தான் திறக்கப்படும்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் செல்வது மட்டுமின்றி தன்னுடைய குழந்தையையும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எடுத்து வருகிறார். ஏனென்றால் குழந்தையை பார்த்துக் கொள்ள அவருக்கு யாரும் இல்லை என்பதால் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு தூக்கி கொண்டு வருகிறார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.