உங்கள கட்டிபிடிக்கனுன்னு ஆசையா இருக்கு…!தன்னுடைய விருப்பத்தை ஓப்பனாக கூறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!!!

0

விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக பல திருப்பங்கள் உடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த நிகழ்ச்சியில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் செம கியூட்டாக அஜித் பட வசனத்திற்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது தாறுமாறு கமெண்டுகளை பெற்று வருகிறது.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளின் ஆசை, விருப்பம், கனவு  அனைத்தையும் பிரதிபலிக்கிறது. மேலும் பல தடைகளை தாண்டி சாதிக்க துடிக்கும் மகனுக்கு உதவும் அம்மா, அம்மாவுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் மகன், பொண்டாட்டியை ஏமாற்றி முன்னாள் காதலி உடன் பழகும் கணவன் என பல சூழல் கதைகளை கொண்டது.

மேலும் இந்த சீரியல் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. இந்த சீரியல் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கதை நாயகி பாக்கியாவின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற ‘உங்கள கட்டிபிடிக்கனுன்னு ஆசையா இருக்கு…’ என தொடங்கும் வசனத்திற்கு அழகாக ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here