உன்ன நெனச்சதும் மனசு மயங்குது..,’ இப்படி மாறிட்டீங்களே டிடி.., அவரே வெளியிட்ட பதிவு!!

0

நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே போகும் டிடி தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு ரீலிஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

டிடி ரீசென்ட் போஸ்ட்

காபி வித் டிடி மற்றும் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார். என்னதான் தற்போது ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் வந்தாலும்கூட டிடியை அடித்துக் கொள்ளவே முடியாது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதற்குப்பிறகு டிடிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. துருவநட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.மேலும், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளையும் தற்போது வரைக்கும் தொகுத்து வழங்கி வருகிறார். திரைப்படம் மற்றும் தொகுப்பாளர் என பிசியான வாழ்க்கையிலும் தொடர்ந்து சமூக வலைப்பக்கங்களில் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

எந்தவொரு ஒரு போட்டோ சூட் என்றாலும் அதனை உடனடியாக தனது ரசிகர்களுக்கு அப்டேட் செய்தபடியே இருந்துவருகிறார். இந்நிலையில் டிடி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு ஏற்ற வகையில் ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here