ரேஷன் டோக்கன் விநியோகம் – தமிழக அரசு உத்தரவு!!!

0

கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ரேஷன் டோக்கன் விநியோக திட்டம் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

விநியோக திட்டம் வீடு தேடிவரும்:

கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கை கருத்தில் கொண்டு; மக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வீடு தேடி வரும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதன் படி ஜூன் மாத பொது விநியோகத் திட்டம், பாதுகாப்புடன் சுழற்சி  முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு   டோக்கன் வழங்கி பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

மேலும் 01-06-2021 முதல் 04-06-2021 வரை குடும்ப அட்டைதார்களுக்கு டோக்கன்கள்; இல்லத்திற்கு வந்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது மக்கள், டோக்கன் அடிப்படையில் 05-06-2021 தேதிலிருந்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட நாள், நேரத்தில் அட்டைதாரர்கள் அவர்தம் நியாய விலைக் கடைகளுக்கு சென்று கொரோனா நிவாரணபொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here