புகழ் பெற்ற பாடகரை கரம் பிடித்த சீரியல் நடிகை.. இணையத்தை கலக்கும் திருமண புகைப்படங்கள்!!!

0

பிரபலமான ஹிந்தி பாடகர் ராகுல் வைத்யா, சீரியல் நடிகையான திஷா பர்மரை மணந்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இவரின் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த தம்பதிகளுக்கு அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பல ஹிட்டான ஹிந்தி பாடல்களை பாடியுள்ள ராகுல் வைத்யா, தனது காதலியான திஷா பர்மரை நேற்று திருமணம் செய்துள்ளார். திஷா பர்மர் ஒரு ஹிந்தி சீரியல் நடிகை. ராகுல் வைத்யா, ஹிந்தி பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அப்போட்டியில் இவர் கலந்து கொண்டபோது காதலர் தினத்திற்கு சர்ப்ரைஸ் தர  திஷா பர்மர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். அப்போதுதான் இவரின் ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் காதலிப்பது தெரியவந்தது.

 

பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது திருமண தேதியை ரசிகர்களுக்கு அறிவித்தனர். தற்போது இவர்கள் இருவருக்கும் நேற்று (ஜூலை, 16) மிகவும் எளிய முறையில் நெருங்கின உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமண போட்டோக்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் பரவி பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here