ஆக்சிஜன் உற்பத்திக்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு மானியம் – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அந்த வகையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு புதிய அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

தமிழக அரசு:

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரான ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் நேரடியாக ஆக்சிஜன் கொள்முதல் செய்யும் நிலையையும் தற்போது ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 30% சிறப்பு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு தரையில் படுக்க வைத்து சிகிச்சை – தொடரும் அவல நிலை!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது. அதுமட்டுமல்லமால் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர்களுக்கு கட்டணமின்றி ஒற்றை சாளர முறையில் விரைவாக அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக நிறுவனங்கள் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here