இந்திய திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்கள் மனதில் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவரின் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து இவருடைய 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இவரின் கதையில் இப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லாததால் இப்படம் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு கைமாறியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் பிறகு இப்படம் குறித்து படக்குழுவிடமிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இதனால் ஏகே 62 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்த நிலையில் லைகா நிறுவனம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு AK 62 படத்தின் தலைப்பு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது.
பிரபு தேவாவின் இரண்டாவது காதல் மனைவியா இது?? இப்போ அவங்களுக்கு என்னாச்சு தெரியுமா??
அதன்படி இப்படம் ”விடாமுயற்சி” என்ற பெயரில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் திரைக்கு வரவுள்ளது என்ற அதிகாரபூர்வ தகவலை கொடுத்துள்ளது. இதையடுத்து ‘விடாமுயற்சி’ பட குழுவினருக்கு விக்னேஷ் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ”நிபந்தனையற்ற அன்பு என்றும் நிரந்தரமானது” என குறிப்பிட்டு அஜித் அவர்களுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Happy birthday #AjithSir ❤️😇💐🏆❤️❤️
your happiness is everything for us 😇😇❤️❤️
Unconditional love Endrum nirandharam ❤️😇🙏🙏💐💐😇😇❤️❤️All the best for #VidaMuyarchi #AK62 magizhThirumeni sir , @anirudhofficial nirav sir @LycaProductions @SureshChandraa and the whole… pic.twitter.com/ZZeipYAvC7
— VigneshShivN (@VigneshShivN) April 30, 2023