மாமியார் மேல இப்படி ஒரு பாசமா விக்னேஷ் சிவன்.., அவரே வெளியிட்ட நெகிழ வைக்கும் பதிவு!!

0

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மாமியாரை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன்:

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த கல்யாணத்துக்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஆனால் நயன்தாராவின் பெற்றோர் சில பல காரணத்தினால் வரவில்லை என்று தகவல் வெளியாகியது. இந்த செய்தி அப்போது பெரிதாக பேசப்படவில்லை. இப்பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது நயன்தாரா அம்மாவை பாசத்துடன் கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், என் அன்புக்கினிய ஓமனா குரியன் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் என்னுடைய இன்னொரு அம்மா. நான் அதிகமாக மதிக்கும் பெண் . அழகிய மனதுடையவர் . அவர்கள் நோய் நொடி இன்றி சந்தோஷமாக வாழ கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here