தளபதியுடன் மோதும் சூரி.., லியோ படத்துக்கு செக் வைத்த விடுதலை 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0
தளபதியுடன் மோதும் சூரி.., லியோ படத்துக்கு செக் வைத்த விடுதலை 2 - உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தளபதியுடன் மோதும் சூரி.., லியோ படத்துக்கு செக் வைத்த விடுதலை 2 - உற்சாகத்தில் ரசிகர்கள்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

விடுதலை திரைப்படம்:

தற்போதைய சினிமா உலகில் நாவலை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஜெயமோகனின் துணைவன் நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. மேலும் காமெடி நடிகரான சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சாமானிய மக்களுக்கும் காவல்துறைக்கும் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 6.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். இதனால் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சூரி சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

மாடர்ன் உடையில் மனசை கெடுக்கும் காவியா.., அந்த பேரழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!

அதாவது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சூரியிடம் விடுதலை 2 குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர் விடுதலை 2 கண்டிப்பாக அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது. தற்போது விஜய் படமுடன் சூரி படம் மோத போகிறதா? என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here