‘யாராலயும் இவங்க இடத்தை நிரப்ப முடியாது..,’ – உண்மையை உடைத்து பேசிய சுந்தரி .சி!!

0
'யாராலயும் இவங்க இடத்தை நிரப்ப முடியாது..,' - உண்மையை உடைத்து பேசிய சுந்தரி .சி!!

இயக்குனர் சுந்தர். சி எடுத்த உள்ளதை அள்ளித்தா திரைப்படம் அமோக வெற்றி அடைந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அண்மையில் பேசியுள்ளார்.

உள்ளத்தை அள்ளித்தா:

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கி, தற்போது நடிகராக அசத்தி வருபவர் தான் இயக்குனர் சுந்தர். சி. அந்த வகையில் இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது. இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு சிற்பி என்பவர் இசையமைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்ததால் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. இந்நிலையில் அண்மையில் நடந்த ஒரு பேட்டியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சுந்தர். சி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது, படத்தோட இரண்டாம் பாகத்தை குறித்து கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன் ஆகியோரிடம் கூறினேன். இரண்டாம் பாகம் ஓப்பனிங் சீனில் நடிகை ரம்பாவின் புகைப்படத்துக்கு மாலை போட்டிருப்பது போன்று காட்சி வைத்திருந்தேன்.

இயக்குனர் மணிரத்னம் மனிதாபிமானமே இல்லாதவர்,, நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேட்டி!!

அதாவது ஒரு கார் விபத்தில் ரம்பா இறந்த மாதிரியும், அந்த கஷ்டத்தை தாங்க முடியாமல் கார்த்திக் வெளிநாடு செல்வது போன்று காட்சி வைத்திருந்தேன். இந்த கதையைக் கேட்டவுடன் எல்லோருக்குமே பிடித்து விட்டது. ஆனால் முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனதால் பார்ட் 2 மூலம் சொதப்பி விடக்கூடாது என இந்த முயற்சியை கைவிட்டேன். மேலும் இந்த காலகட்டத்தில் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தாலும் கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன் போன்ற நடிகர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here