ஹன்சிகா லாம்  இல்ல.., அதுக்கும் மேல ஒருத்தர இறக்க போறோம்! டிவிஸ்ட் கொடுத்த அரண்மனை 4 டீம்!!

0
ஹன்சிகா லாம்  இல்ல.., அதுக்கும் மேல ஒருத்தர இறக்க போறோம்! டிவிஸ்ட் கொடுத்த அரண்மனை 4 டீம்!!
ஹன்சிகா லாம்  இல்ல.., அதுக்கும் மேல ஒருத்தர இறக்க போறோம்! டிவிஸ்ட் கொடுத்த அரண்மனை 4 டீம்!!

இயக்குனர் சுந்தர்.சி படைப்பில் உருவாக இருக்கும் அரண்மனை பார்ட் 4 குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அரண்மனை பார்ட் 4

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுகுடி, அருணாச்சலம், கிரி, வின்னர், கலகலப்பு போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கமர்ஷியலில் இருந்து பேய் படங்களுக்கு ஷிப்ட் ஆகினார் சுந்தர்.சி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா மற்றும் சந்தானம் ஆகியோர் லீடு ரோல் நடிப்பில் உருவான அரண்மனை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ரீச்சானது. அதன் பின் 2016ம் ஆண்டு அரண்மனை 2 இயக்கினார். இந்த படமும் நன்றாக திரையரங்கில் ஓடி, வசூலை பெற்று தந்தது. ஆனால் கடைசியாக வெளியான அரண்மனை பார்ட் 3 திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றி படுதோல்வியடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் 4 பாகத்தை சுந்தர்.சி ரெடி செய்து வருகிறார்.

ஆதரவின்றி அசிங்க பேச்சுக்கு ஆளான சகோதரிகள்.., துணை நிற்கும் குமரன்.., மகாநதி ப்ரோமோ ரிலீஸ்!!

இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், சம்பள பிரச்சனை காரணமாக அவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, அரண்மனை பார்ட் 4ல் நடிகை ராசி கண்ணா மற்றும் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதன்முதலாக சுந்தர்.சியுடன் தமன்னா கைகோர்க்கிறார். ஆனால் ராசி கண்ணா அரண்மனை 3 ல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here