அடேங்கப்பா.., படத்துக்கு டைட்டிலே வைக்கல..,அதுக்குள்ள ரிலீஸ் தேதியை அறிவிச்சிட்டாங்க.., கெத்து காட்டும் சுதா கொங்கரா!!

0

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வரும் சூரரை போற்று இந்தி வெர்ஷன் ரிலீசாகும் தேதி குறித்து படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சூரரை போற்று

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இப்படத்தின் இந்தி வெர்சனை சுதா கொங்கரா எடுத்து வருகிறார். இதில் சூர்யா நடித்த கேரக்டரில் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பும்ராவை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயருக்கும் அறுவை சிகிச்சையா?? ஐபிஎல் & WTC பைனல்ஸை இழக்கும் அபாயம்!!

அதாவது சூரரை போற்று இந்தி வெர்ஷன் வருகிற செப்டம்பர் மாதம் 1ம் தேதி வெளியாக இருப்பதாக போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் டைட்டில் இன்னும் வைக்காத நேரத்தில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here