திருமணத்திற்கு தயாரான எஸ்.ஜே.சூர்யா.. ரசிகர் மத்தியில் குவியும் வாழ்த்து – அவரே அளித்த பதில்!

0
திருமணத்திற்கு தயாரான எஸ்.ஜே.சூர்யா.. ரசிகர் மத்தியில் குவியும் வாழ்த்து - அவரே அளித்த பதில்!

இயக்குனராக இருந்து அதன் பின் நடிகராக தமிழ் சினிமாவில் மிரட்டி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. அண்மையில் இவரின் திருமணம் தொடர்பாக ஒரு சில தகவல்கள் வெளியானது. இது குறித்து எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா விளக்கம்:

முன்னணி நடிகரான அஜித்குமாரை வைத்து வாலி என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பின்னர் விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்களிடம் நீங்கா இடம் பிடித்தார். மேலும் சில படங்களில் முக்கிய குண நட்சத்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது வில்லன் அவதாரம் எடுத்து சினிமாவை மிரட்டி வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வயது 54 ஆன நிலையில் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகி வந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இது குறித்து எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, எனது திருமணம் குறித்து என் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருவதாக சில தகவல் வெளியாகி உள்ளது. அது எதுவும் உண்மை இல்லை, நான் எனது திருமணத்தை பற்றி சிந்தித்து கூட பார்க்கவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் சினிமா துறையில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் குறித்து வரும் பொய்யான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here