ரஜினியை தொடர்ந்து குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்.., இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!!

0
ரஜினியை தொடர்ந்து குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்.., இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!!
ரஜினியை தொடர்ந்து குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்.., இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு படத்தை பிரமாண்டமாக எடுப்பதில் வல்லமை மிக்கவர் தான் இயக்குனர் சங்கர். அந்த வகையில் இவர் எடுத்த ஜீன்ஸ், இந்தியன், ஜென்டில்மேன், எந்திரன், நண்பன் மற்றும் ஐ போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது அவர் உலக நாயகன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கு ஸ்டார் ராம்சரண் நடித்துவரும் ஆர் சி 15 என்ற படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். மேலும் இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கூடிய விரைவில் ஷூட்டிங் முடிவடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்ல குடும்ப குத்து விளக்கு இருந்துட்டு இப்ப இப்படியா? எல்லை மீறும் காவியா அறிவுமணி!!

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6 நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் மும்மரமாக கமல் இறங்கிய நிலையில், படத்தின் ஷூட்டிங் இப்பொழுது திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அதாவது இயக்குனர் சங்கர் படைப்பில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து வரும் நிலையில், இயக்குனர் சங்கர் தனது மகளான அதிதி சங்கர் மற்றும் ஒரு மகன் மனைவியுடன் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here