இயக்குனர் சங்கரின் பிறந்த நாளுக்கு கமல் தந்த பரிசு.. அடடே இது போதுமே – ரசிகர்கள் உற்சாகம்!

0
இயக்குனர் சங்கரின் பிறந்த நாளுக்கு கமல் தந்த பரிசு.. அடடே இது போதுமே - ரசிகர்கள் உற்சாகம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலக நாயகன் கமல் அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

59-வது பிறந்தநாள்:

தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் ஷங்கர். கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ஜென்டில் மேன் படத்தின் மூலம் தனது இயக்குனர் பணியை ஆரம்பித்து தற்போது வரை தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

மேலும் இவர் எடுத்த அனைத்து படங்களும் வித்தியாசமான கதைக்களம் கொண்டு பிரமாண்டமாக எடுக்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.  இந்நிலையில் இன்று இவரின் 59-வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் கதிரிடம் சவால் விட்டு கேவலப்படுத்தும் மல்லி.., வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

அதில் அவர் கூறியதாவது, ‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.  மேலும் இவர்களது காம்போவில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான செட் அமைக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here