சூப்பர் அப்டேட்.., புதுப்பேட்டை 2 ரெடி.. வைரலாகும்  செல்வராகவனின் பதிவு!!

0
சூப்பர் அப்டேட்.., புதுப்பேட்டை 2 ரெடி.. வைரலாகும்  செல்வராகவனின் பதிவு!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தனது கதைகளில் வித்தியாசமான காதல் ஸ்வாரசியங்களை சொல்லிய இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்புகளை கொடுத்தனர். இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புதுப்பேட்டை. இத்திரைப்படம் கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து அசத்தியது.

இதில் நடிகர் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  தற்போது செல்வராகவன் தனது X தளத்தில் ஓர் முக்கிய பதிவை பதிவிட்டுள்ளார். அதில் ‘புதுப்பேட்டை 2’ படம் இந்த ஆண்டிலாவது நடக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

பி.எம். கிசான் திட்டம்.., இனி இவர்களுக்கு உதவித்தொகை கிடையாது.., வெளியான பகீர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here