சீனு ராமசாமி இயக்கத்தில் நெப்போலியன்.. ஹெலிகாப்டரில் லொகேஷன் தேடிய படக்குழு.., புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

0
சீனு ராமசாமி இயக்கத்தில் நெப்போலியன்.. ஹெலிகாப்டரில் லொகேஷன் தேடிய படக்குழு.., புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!
சீனு ராமசாமி இயக்கத்தில் நெப்போலியன்.. ஹெலிகாப்டரில் லொகேஷன் தேடிய படக்குழு.., புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இயக்குனர் சீனுராமசாமி படைப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் நெப்போலியன் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் சீனுராமசாமி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சீனுராமசாமி. சமீபத்தில் அவர் இயக்கிய மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தொடர்ந்து பல விருதுகளை வென்று வருகிறது. தற்போது சீனு ராமசாமி, ஜி வி பிரகாஷ் நடிப்பில் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காயத்ரி நடிக்கிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் நடக்கும் கதையினை குறித்து தனது அடுத்த படத்தை எடுப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.

சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்தியா…, முத்தரப்பு தொடரில் அசத்தல்!!

மேலும் இப்படத்தில் நெப்போலியன் மற்றும் நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்துக்கான லொகேஷன் தேடும் பணிக்காக சீனு ராமசாமியை ஹெலிகாப்டரில் வைத்து அமெரிக்காவை சுற்றி காமித்துள்ளார் நெப்போலியன். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here