அம்மாடி.., “காதல் மன்னன்” படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா? ஒரே நடிகருக்காக ஆறு மாதம் காத்திருந்த படக்குழுவினர்!!

0
அம்மாடி..,
அம்மாடி.., "காதல் மன்னன்" படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா? ஒரே நடிகருக்காக ஆறு மாதம் காத்திருந்த படக்குழுவினர்!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவான “காதல் மன்னன்” படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை நடிக்க வைப்பதற்கு ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டதாக இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார்.

காதல் மன்னன்:

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து மாஸ் காட்டி வருபவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியாக நல்ல லாபம் ஈட்டியது. இப்பொது மாஸ் படங்களில் நடித்து வரும் அஜித் ஒரு காலத்தில் காதல் படங்களில் வெளுத்து வாங்கியிருப்பார். அதில் மறுக்க முடியாத திரைப்படம் என்றால் காதல் மன்னன் தான். நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி கடைசியில் சேருவார்களா?? இல்லையா?? என்பதே படத்தின் மையக்கரு. இப்படத்தில் விவேக், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், கரன் மற்றும் மானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு நடிப்பில் இதுவே முதல் படம். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் “காதல் மன்னன்” படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை நடிக்க வைப்பதற்கு ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டதாக இயக்குநர் சரண் கூறியுள்ளார். அதாவது படத்தின் கதையை எம்.எஸ். விஸ்வநாதனிடம் கூறிய போது அவர் நடிக்க மறுத்து விட்டாராம். ஆனாலும் அவரை விடாமல் சரணும் விவேக்கும் தொடர்ந்து ஆறு மாதங்களாக வற்புறுத்தி கொண்டே இருந்தனர்.

வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் அரசுக்கு ரூ. 2.2 லட்சம் கோடி மிச்சம்., மத்திய அரசு பெருமிதம்!!

அதன் பின்னர் சரண் ஒரு கடிதம் எழுதி, எம்.எஸ். விஸ்வநாதன் வீட்டிற்கு சென்று அவருடைய தாயார் புகைப்படம் முன்பு வைத்தனர். அதை பார்த்த எம்.எஸ். விஸ்வநாதன் ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சரண், நாங்கள் சொல்லித்தான் கேட்கல. அம்மா சொன்ன கேட்பீங்கனு தான் இப்படி பண்ணேன் என்று கூறினார். இதை தொடர்ந்து அடுத்த நாள் எம்.எஸ். விஸ்வநாதன் சரணுக்கு கால் பண்ணி நான் நடிக்கிறேன் என்று சொல்லி ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ராம மூர்த்திக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ஓகே சொல்லி படத்தை ஸ்டார்ட் செய்தோம் என்று சரண் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here