கார்த்தி படத்தில் இணையும் ஷங்கர் மகள் அதிதி – நடிகர் சூர்யா வெளியிட்ட அதிரடி பதிவு!!

0

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குநராக திகழும் சங்கர் அவர்களின் இளைய மகள் அதிதி தற்போது திரையுலகில் கால் பதிக்கவுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷங்கர் மகள் அதிதி

ஜென்டில் மேன் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் தான் ஷங்கர். இவரின் அடையாளமே பிரமாண்ட முறையில் படங்களை தயாரிப்பது தான். ஆரம்ப கட்டத்தில் எளிமையாக படங்கள் எடுத்திருந்தாலும் நாளுக்கு நாள் படத்தில் கூடுதல் கவனம் பெற பிரமாண்டத்தை காட்ட ஆரம்பித்தார்.

மேலும் முன்னணி நடிகர்களை வைத்து தான் படம் எடுக்கவும் ஆரம்பித்தார். காதலன், முதல்வன், ஜீன்ஸ், பாய்ஸ் என இவற்றின் ஹிட் படங்கள் அனைத்துமே 90 கிட்ஸ்களின் பேவரைட்டான படங்கள் தான். இப்பொழுது வரை அழியாத புகழை பெற்று வருகிறது.

இப்பொழுது இந்தியன் 2 படத்திற்கான வேலைப்பாடுகள் போயிக்கொண்டுள்ளது. இவரே இன்னும் தமிழ் திரையுலகை கலக்கி கொண்டிருக்கும் வேளையில் அவரது மகள் அதிதியும் சினிமாவில் களமிறங்கவுள்ளார். நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகவுள்ளார்.

இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. கொம்பன் படத்திற்கு பிறகு முத்தையா-கார்த்தி காம்போ விருமன் படத்தில் களமிறங்கியுள்ளது. மேலும் ஷங்கர் சூர்யாவிற்கு இதுகுறித்து நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here