என்கிட்ட தான் பிரச்சனை.., அது விஜய்க்கு பிடிக்கல அவ்வளவு தான்.., மகனை குறித்து பேசிய எஸ்ஏசி!!

0
என்கிட்ட தான் பிரச்சனை.., அது விஜய்க்கு பிடிக்கல அவ்வளவு தான்.., மகனை குறித்து பேசிய எஸ்ஏசி!!
என்கிட்ட தான் பிரச்சனை.., அது விஜய்க்கு பிடிக்கல அவ்வளவு தான்.., மகனை குறித்து பேசிய எஸ்ஏசி!!

எஸ். எ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய்யை பற்றி கூறியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நான் கடவுள் இல்லை:

கோலிவுட் வட்டாரங்களில் 80,90 ஸ் காலகட்டத்தில் எக்கசக்க படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் எஸ்.ஏ. சந்திரசேகர். தற்போது சமுத்திரக்கனி லீடு ரோலில் நடிக்கும் நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுமட்டுமின்றி அவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக இவருக்கும் தளபதி விஜய்க்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி வைரலானது. இந்நிலையில் எஸ். எ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய்யை பற்றி கூறியது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இதுக்கு மேல முடியாது.., ப்ரைம் டைம் சீரியலுக்கு END கார்ட் போட்ட 2 முக்கிய சேனல்!!

அவர் கூறியதாவது, பொதுவாக ஆண்களுக்கு அம்மாவை தான் அதிகம் பிடிக்கும். ஆனால் என் மகன் விஜய்க்கு என்னைய தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் நாங்க அதிகமாக பேசிக்க மாட்டோம். என்னிடம் அதிக மைனஸ் இருக்கு. மேலும் அவர் பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கலாம் ஆனா அவர் எனக்கு எப்போதும் குழந்தை தான் என்று கூறினார். அதனால் சில பிரச்சனைகள் வந்தது அதை சொல்ல விரும்பல விடுங்க என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here