தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் தான் S.A சந்திரசேகர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக இயக்குனராக பணியாற்றி வந்த இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். தற்பொழுது இவர் தனது வாழ்க்கை பற்றி பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில், “நான் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்று சொல்லுவார்கள். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது. அதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்ததில் எனக்கு ஒரு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அதை ஆபரேஷன் மூலம் சரி செய்து தற்போது நன்றாக இருக்கிறேன். இதை நான் ஏன் இப்பொது சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி சமயத்தில் பாசிட்டிவாக இருந்தால் நல்லதே நடக்கும் என்று பேசியுள்ளார்.
50 வது பிறந்தநாளை அமோகமாக கொண்டாடிய அருண் விஜய்யின் அக்கா., வாயடைத்து போன இணையவாசிகள்!!