ரசிகர்களே கொண்டாட ரெடியாகுங்க.., மீண்டும் இணையும் லவ் டுடே காம்போ.., வெளியான அப்டேட்!!

0
ரசிகர்களே கொண்டாட ரெடியாகுங்க.., மீண்டும் இணையும் லவ் டுடே காம்போ.., வெளியான அப்டேட்!!
ரசிகர்களே கொண்டாட ரெடியாகுங்க.., மீண்டும் இணையும் லவ் டுடே காம்போ.., வெளியான அப்டேட்!!

லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன்:

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்திலே புகழின் உச்சிக்கு சென்ற இயக்குனர் என்றால் அது பிரதீப் ரங்கநாதன். இவர் கடைசியாக இயக்கிய லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் எதிர்பார்க்காத அளவுக்கு ஓடி வசூலை வாரி குவித்தது. வெறும் 8 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடியை அள்ளி வசூல் சாதனை படைத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது மீண்டும் அதே தயாரிப்பாளருடன் இணைந்து புதிய படத்தை இயக்க இருக்கிறாராம். அப்படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். மேலும் இன்ஜினியரிங் மாணவர்களின் கஷ்டநஷ்டங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுக்க இருக்கிறாராம் பிரதீப்.

Loki பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் செஞ்ச லியோ படக்குழுவினர்.., நன்றி ட்வீட் போட்ட லோகேஷ் கனகராஜ்!!

இந்த படத்திலும் 100 கோடியை அள்ள வேண்டும் என்று பிரதீப் கதை ஏழுவதில் முனைப்புடன் இருந்து வருகிறாரம். இது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here