மதுவை விட பனை மரத்தின் கள்ளு உடம்புக்கு நல்லது.., இயக்குனர் பேரரசு பேட்டி!!

0
மதுவை விட பனை மரத்தின் கள்ளு உடம்புக்கு நல்லது.., இயக்குனர் பேரரசு பேட்டி!!
மதுவை விட பனை மரத்தின் கள்ளு உடம்புக்கு நல்லது.., இயக்குனர் பேரரசு பேட்டி!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் இயக்குனர் பேரரசு. அந்த வகையில் இவர் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நந்தா லட்சுமணன் இயக்கிய நெடுமி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேரரசு கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் மேடையில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவர் கூறியதாவது, நெடுமி திரைப்படம் முழுக்க முழுக்க பனை மரத்தின் சிறப்புகளை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். மேலும் வேறு எந்த மரத்திலும் இல்லாத சிறப்பு அம்சம் பனை மரத்தில் இருக்கிறது. இந்த மரம் தண்ணீர் ஊற்றாமல் தானாகவே வளரும். அதுமட்டுமின்றி இந்த மரத்தின் மூலம் வரும் பழம், கருப்பட்டி, நொங்கு, பதநீர், கள் போன்ற அனைத்தையும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

சுந்தர்.cயுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சந்தானம்.., வீடுதேடி சென்று சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி!!

ஆனால் சிலர் கள் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று சொல்லி வருகிறார்கள். உண்மையை சொல்லப்போனால் கள் உடல் நலத்திற்கு கேடு கிடையாது. சிறிய போதை தரும் அவ்வளவுதான். ஆனால் அந்தக் கள்ளில் அவ்வளவு ஊட்டச்சத்து இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல் என்றும், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் கள் விற்கலாம் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here