“இரவின் நிழல்” படம் பர்ஸ்ட் சிங்கிள் ஷாட் கிடையாது.., வெளிவந்த முழு உண்மை!!

0
"இரவின் நிழல்" படம் பர்ஸ்ட் சிங்கிள் ஷாட் கிடையாது.., வெளிவந்த முழு உண்மை!!

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படம் பற்றி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இரவின் நிழல்:

கோலிவுட்டில் இயக்குனர், நடிகர் என ஒரு கலக்கு கலக்கி வருபவர் தான் இயக்குனர் பார்த்திபன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறு காணாத சாதனைகளைப் படைத்தது. மேலும் தமிழ் திரையுலகில் எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் முதல் நான் லீனியர் திரைப்படம் என்று படக்குழுவினர் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியானது. இப்படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் போட்டி போட்டு படத்தை டவுன்லோடு செய்து வருகின்றனர்.

ஆத்தாடி.., ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.., மொத்தமாக பிளாட் ஆகிட்டோம் யாஷிகா!!

டவுன்லோடு ஆனதை கிளிக் கொடுத்து ஓபன் செய்தால் படத்தின் தொடக்கத்தில் ட்ரிவியா என்ற பகுதி தொகுப்பில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், இயக்குனர் பார்த்திபன் கூறுவது போல் இரவின் நிழல் திரைப்படம் பர்ஸ்ட் சிங்கிள் நான் லீனியர் படம் கிடையாது. இந்த படம் உலகின் இரண்டவது சிங்கிள் நான் லீனியர் படம் என்று அமோசான் ப்ரைம் சுட்டி காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here