இத தான்யா எதிர்பார்த்தோம்.., விரைவில் ரெடியாகும் தனி ஒருவன் 2 – சூப்பர் அப்டேட் சொன்ன மோகன் ராஜா !!

0
இத தான்யா எதிர்பார்த்தோம்.., விரைவில் ரெடியாகும் தனி ஒருவன் 2 - சூப்பர் அப்டேட் சொன்ன மோகன் ராஜா !!
இத தான்யா எதிர்பார்த்தோம்.., விரைவில் ரெடியாகும் தனி ஒருவன் 2 - சூப்பர் அப்டேட் சொன்ன மோகன் ராஜா !!

இயக்குனர் மோகன் ராஜா படைப்பில் உருவான தனி ஒருவன் திரைப்படம் பார்ட் 2 குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தனி ஒருவன்

ஜெயம் படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் தான் மோகன் ராஜா. இந்த படத்தை தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், M. குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்தார் . அதற்கடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு தனி ஒருவன் என்ற திரைப்படம் மோகன் ராஜாவுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி அரவிந்த் சாமிக்கு இந்த திரைப்படம் பெரிய கம்பேக்காக இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வாராத என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

நீயா நானா ஷோவிலிருந்து வெளிநடப்பு செஞ்ச கோபிநாத்.., அப்படி என்னதான் பேசுனாங்க!!!

அதாவது ஜெயம் ரவி நடிப்பில் உருவான தனி ஒருவன் திரைப்படம் பாகம் 2 கண்டிப்பாக அடுத்த வருடம் வரும் என்று இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை ஏஜில் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here