அடேங்கப்பா.., பொன்னியின் செல்வன் 2 வசூல் இத்தனை கோடியா? அடுத்த சாதனைக்கு ரெடியான படக்குழுவினர்!!

0
அடேங்கப்பா.., பொன்னியின் செல்வன் 2 வசூல் இத்தனை கோடியா? அடுத்த சாதனைக்கு ரெடியான படக்குழுவினர்!!
அடேங்கப்பா.., பொன்னியின் செல்வன் 2 வசூல் இத்தனை கோடியா? அடுத்த சாதனைக்கு ரெடியான படக்குழுவினர்!!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இதுவரை கலெக்ட்டான வசூல் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2:

எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் இருந்து கல்கி எழுதிய பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தனர். ஏன் சமீபத்தில் மறைந்த மனோ பாலா கூட எடுக்க முயற்சி செய்து தோல்வியுற்றார். தற்போது அந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூலித்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் படத்தோட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 29ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஆனால் பார்ட் 1 க்கு கிடைத்த வரவேற்பு பார்ட் 2 க்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் புத்தகத்தில் சில சீன்களை படத்தில் வைக்காததால் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

சுசீலா பாடலை பாடிய போட்டியாளர்.., என் பாட்டு இப்படி இருக்காது., நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம் செய்த சுசீலா அம்மா!!

இருந்தாலும், படத்தின் வசூல் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 வெளியான நாளில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 330 கோடிகளை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் 350 கோடியை தொடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here