இயக்குனர் மணிரத்னம் மனிதாபிமானமே இல்லாதவர்,, நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேட்டி!!

0
இயக்குனர் மணிரத்னம் மனிதாபிமானமே இல்லாதவர்,, நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேட்டி!!
பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குனர் மணி ரத்னத்தை நடிகர் பார்த்திபன், மனிதாபிமானமே இல்லாதவர் என குறிப்பிட்ட பேசிய கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பரபரப்பு பேட்டி:

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த மாத இறுதியில் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. மேலும் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. மேலும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.இந்நிலையில் பேட்டி ஒன்றில், நடிகர் பார்த்திபன் அவர்கள் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் நடிகர்கள் மத்தியில் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வார் என கூறியுள்ளார்.
மேலும் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில் நடிகர் சரத்குமார் நடிக்கும் போது, எதிர்பாராத விதமாக கால் முட்டி பிசகி விட்டது. இதனால், சரத் தாங்கி தாங்கி நடந்து வந்தார். ஆனால், மணிரத்னம் சற்றும் யோசிக்காமல் அந்த காட்சிக்கு “ஒன் மோர்” சொல்லி விட்டார். பின், நிலைமையை சரத் குமார் சொன்னதும், ஓ அப்படியா நீங்கள் இயல்பாக நடிக்கிறீர்கள் என்றுதான் நான் நினைத்தேன் என சிரித்து கொண்டே இருந்தாலும் மறுபடியும் ஒன் மோர் போகலாம் என வற்புறுத்தி சரத்குமாரை நடிக்க சொல்லிவிட்டார். இது மட்டுமல்ல, தான் நினைக்கும் காட்சி வரும் வரை நடிகர்களை அவ்வளவு எளிதில் விடமாட்டார். இந்த விஷயத்தில் அவர் ஒரு மனிதாபிமானம் இல்லாதவர் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here