வாரிசு – துணிவு ரெண்டு படமும் ஜெயிக்கும்.., இயக்குனர் ஹச் வினோத் பேட்டி!!

0
வாரிசு - துணிவு ரெண்டு படமும் ஜெயிக்கும்.., இயக்குனர் ஹச் வினோத் பேட்டி!!
வாரிசு - துணிவு ரெண்டு படமும் ஜெயிக்கும்.., இயக்குனர் ஹச் வினோத் பேட்டி!!

விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு, துணிவு படங்கள் குறித்து இயக்குனர் வினோத் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

இயக்குனர் ஹச் வினோத்:

திரையுலகில் நுழைந்த கொஞ்சம் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் ஹச் வினோத். இவர் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அஜித்குமாருடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதே போல தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் துணிவுக்கு போட்டியாக களமிறங்குகிறது. இதனால் இருதரப்பு ரசிகர்களும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், படத்திற்காக புரொமோஷனும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு படங்களை குறித்து இயக்குனர் ஹச். வினோத் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சாலை விதியை மதிக்காத GP முத்து.., கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்!!!

அவர் கூறியதாவது, தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நான் அஜித்தை வைத்து இயக்கிய துணிவு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓட வேண்டும். சொல்ல போனால் வெற்றி – வெற்றி என்ற அடிப்படையில் ஓட வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here