ஆஹா.., தரமான சம்பவம்..,மீண்டும் உலகநாயகனுடன் இணையும் விஜய் சேதுபதி.., இயக்குனர் யார் தெரியுமா?

0
ஆஹா.., தரமான சம்பவம்..,மீண்டும் உலகநாயகனுடன் இணையும் விஜய் சேதுபதி.., இயக்குனர் யார் தெரியுமா?
ஆஹா.., தரமான சம்பவம்..,மீண்டும் உலகநாயகனுடன் இணையும் விஜய் சேதுபதி.., இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கமல் – விஜய் சேதுபதி:

சினிமா துறையில் மூத்த கலைஞராக இருந்து வருபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது பிரபல இயக்குனர் சங்கரின் படைப்பில் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விஜய் சேதுபதிக்கும் கொடுத்திருந்ததால் தான் விக்ரம் திரைப்படம் வெற்றி வாகை சூடியது. மேலும் இவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் முரளியின் இந்த போட்டோவை யாருமே பார்த்திருக்க மாட்டிங்க.., அப்போவே எப்படி இருக்காங்க!!

அதாவது நடிகர் அஜித்தை வைத்து துணிவு திரைப்படத்தை இயக்கிய ஹச். வினோத்துடன் கமல்ஹாசன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோசத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here