“கொரோனா குமார்” படத்தில் சிம்புக்கு பதில் பிரதீப் ரங்கநாதன் தானா? இயக்குனர் கோகுல் விளக்கம்!!

0
"கொரோனா குமார்" படத்தில் சிம்புக்கு பதில் பிரதீப் ரங்கநாதன் தானா? இயக்குனர் கோகுல் விளக்கம்!!

இயக்குனர் கோகுல் படைப்பில் நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் கொரோனா குமார் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர் தான் நடிகர் சிம்பு. கடந்த ஆண்டு ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சிம்பு இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது ஒரு படம் எடுத்து முடித்த நிலையில், சிம்புவின் அடுத்த படத்தை கோகுல் இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இதனை தொடர்ந்து சில பல காரணத்தால் சிம்பு இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் சிம்புக்கு பதில் லவ் டுடே பிரபலம் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தற்போது கொரோனா குமார் படத்தை குறித்து இயக்குனர் கோகுல் பேசியுள்ளார்.

இடுப்பழகி இலியானாவுக்கு கடைசில இப்படி ஆகிடுச்சே.., மருத்துவமனையில் அனுமதி!!!

அவர் பேசியதாவது, இணையத்தில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது. கொரோனா குமார் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவில்லை. மேலும் கொரோனா குமார் படம் ட்ராப் ஆனாலும், நடிகரை மாற்றினாலும் நான் தான் அறிவிப்பேன் என்று கூறினார். கூடிய விரைவில் படத்தை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்தார். தற்போது சிம்பு நடித்த பத்து தல படம் மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here