‘வெந்து தணிந்தது காடு’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கெளதம் மேனன் – பெட்டியில்  நடந்த  சலசலப்பு!!

0

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அவ்விழாவில் விமர்சனங்கள் குறித்து கெளதம் மேனன் பேசியுள்ளார்.

வெந்து தணிந்தது காடு:

கெளதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை படைத்து வருகிறது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கௌதம் மேனன், ” இந்த விழாவில் எந்தளவு பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அதுமட்டுமின்றி ஏதாவது தவறாக பேசி விடுவோமோ என்ற அச்சம் இருக்கிறது.

ஏனென்றால் அண்மையில் படம் பார்க்க வருவதற்கு முன்னர் நன்றாக உறங்கி கொண்டு வாருங்கள் என்று நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. நான் அதிகாலையில் விமானத்தில் செல்வதற்கு என்னுடைய அம்மா இரவு நன்றாக உறங்கு அப்போது தான் பிரெஷ் ஆக செல்லலாம் என்று கூறுவார். அந்த அர்த்தத்தில் தான் நான் சொன்னேன் என்று கூறினார். மேலும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு நல்ல விமர்சனங்கள் எழுந்து வருவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல் சில கலவையான விமர்சனங்களுக்கும் நன்றி. என்னுடைய படக்குழுவினர்கள் எல்லா விமர்சனங்களையும் படித்து வருகிறார்கள். நான் சில நேரம் யோசிப்பது உண்டு. இந்த விமர்சனங்களே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று. படங்கள் திரைக்கு வந்த பிறகு படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனங்களை படிப்பேன். மேலும் படத்தின் விமர்சனங்கள் அடுத்த நபரின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போடுவதாக இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து படத்தையும் முழுவதுமாக பாதிக்கும். ஒரு படம் வேண்டும் வேண்டுமென்றால் எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்கும் தெரியும், உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதாக கூறினர். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஐசர் கணேஷ் தொலைபேசியில் பேசும் பொழுது, அதலாம் ஒன்றும் இல்லை சார், நாம் படத்தை விட்டு பார்க்கலாம் என்று கூறினார். அதே போல் படம் நன்றாக ஓடுகிறது, என் மேல் நம்பிக்கை வைத்ததுக்கு நன்றி கூறி உரையை முடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here