கெளதம் மேனன் அடுத்த படத்தில் இவரா ஹீரோ.., அப்ப ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!!

0
கெளதம் மேனன் அடுத்த படத்தில் இவரா ஹீரோ.., அப்ப ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!!
கெளதம் மேனன் அடுத்த படத்தில் இவரா ஹீரோ.., அப்ப ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!!

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரின் அடுத்த படத்தின் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன்:

கெளதம் மேனன் இயக்கி நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி குவித்து வருகிறது. மேலும் இந்த படத்தை விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இருக்குமோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கெளதம் மேனன் படம் என்றால் ஸ்டைலிஷ் தான் இருக்கும் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்து, மாறுபட்ட ஒரு ஆக்சன் கதைக்களத்தை ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கொடுத்து இருக்கிறார் கெளதம். இதனை தொடர்ந்து அவரின் அடுத்த படத்தின் நடிகரை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.அதாவது அண்மையில் வெளியான வாரியார் படத்தின் கதாநாயகனான நடிகர் ராம் பொத்தினேனியுடன் இணைய இருக்கிறார் கெளதம் மேனன்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

நடிகர் ராம் பொத்தினேனி பொதுவாக வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இந்நிலையில் கெளதம் மேனன்-ராம் பொத்தினேனி காம்போவில் உருவாகும் கதைக்களம் எந்த அளவிற்கு ரசிகர்களை வியக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here