ஒருவழியா முருங்கைக்காய் ரகசியத்தை மேடையில் உடைத்த பாக்யராஜ்.., கடைசியில சப்புன்னு முடிச்சுருச்சே!!

0
ஒருவழியா முருங்கைக்காய் ரகசியத்தை மேடையில் உடைத்த பாக்யராஜ்.., கடைசியில சப்புன்னு முடிச்சுருச்சே!!
ஒருவழியா முருங்கைக்காய் ரகசியத்தை மேடையில் உடைத்த பாக்யராஜ்.., கடைசியில சப்புன்னு முடிச்சுருச்சே!!

அட்டு திரைப்படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா படைப்பில் தற்போது உருவாகியுள்ள லாக் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் பேசியது வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் பாக்யராஜ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இயக்குனர் பாக்கியராஜ். அந்த வகையில் இவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி மற்றும் தூறல் நின்னு போச்சு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து இவர் இயக்கிய எல்லா படங்களிலும் முருங்கைக்காய் மையக்கருத்தாக இருந்து வரும். அதில் என்னவோ ரகசியம் இருக்கு என்று ரசிகர்கள் இணையத்தில் பரவலாக பேசி வந்தனர். இந்நிலையில் அந்த ரகசியத்தை பாக்கியராஜ் சமீபத்தில் நடந்த லாக் பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பல ஆண்டுகள் கடந்தும் என் படத்தில் வந்த முருங்கைக்காய் கதையை பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேசி வருகிறார்கள்.

தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., பட ரிலீஸுக்கு விஜய் வர போறாராம்.., எங்கு, எப்போது தெரியுமா?

அதை நினைத்தால் எனக்கு சந்தோசமாக இருக்கிறது. நான் படத்தில் வைத்ததற்கு காரணம் எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கைக்காய் துண்டுகள் குறைவாகத்தான் பரிமாறுவார் . என்னுடன் சேர்ந்து சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். நான் இன்னும் ரெண்டு பீஸ் அதிகமாக கேட்டால் இது உனக்குப் போதும் என்று திட்டுவார். ஆனால் என் மாமாவுக்கு மட்டும் வாரி வழங்குவார். அதன் காரணம் என்ன என்று சில பேரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். மேலும் என் படத்தில் இதை எதார்த்தமாக தான் வைத்தேன். இருந்தும் மக்கள் தற்போது வரை பேசி வருவது ஆனந்தமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here