
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறன்களை கொண்டு வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவரது கேரியரில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது பிச்சைக்காரன் தான். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பாரதிராஜா, பாக்கியராஜ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பாக்யராஜ், விஜய் ஆண்டனியை விபத்தில் காப்பாற்றிய நடிகை காவ்யா தாப்பர் பற்றி ஒரு சில வார்த்தை பேசியுள்ளார்.
இனி எல்லாம் டோடல் வேஸ்ட்.., கோபிக்கு இனியா கொடுத்த பெருத்த அவமானம்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!
அதாவது பிச்சைக்காரன் 2 ஷூட்டிங் மலேசியாவில் இருக்கும் லங்காவி தீவில் நடந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார். அப்போது தண்ணீரில் விழுந்த அவர் நீச்சல் தெரியாமல் தத்தளித்த போது, காவ்யா தாப்பர் தான் தைரியமாக சென்று கையை பிடித்து காப்பாற்றினார். அந்த பொண்ணோட தைரியத்தை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன் என்று பாக்யராஜ் புகழாரம் பாடியுள்ளார்.