அட்லீக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் விஜய்.., ட்விட்டரில் காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!

0
அட்லீக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் விஜய்.., ட்விட்டரில் காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!
அட்லீக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் விஜய்.., ட்விட்டரில் காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!

இயக்குனர் அட்லி பிறந்த நாளன்று விஜய், ஷாருக்கான் இருவரும் நேரில் சென்று ஷாக் கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் அட்லி:

கோலிவுட்டில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் உதவியாளராக பணிபுரிந்து, ராஜா ராணி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது ஹிந்தி பக்கம் ஒதுங்கியுள்ளார். அதாவது நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடடா..,, அழகுலையே சொக்க வைக்கிறீங்களே அனிகா.., 1 நிமிடம் தடுமாறிப்போன இளசுகள்!!

இந்நிலையில் இயக்குனர் அட்லி தனது 36 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர். இந்த பார்த் டே நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கான் நேரில் சென்று வாழ்த்து மழையை பொழிந்து உள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அட்லீ. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here