2 வருடங்கள் கழித்து தரமான கம்பேக் கொடுக்கும் ஏ. ஆர் முருகதாஸ்.., ஹீரோ, யாருன்னு தெரிஞ்சா ஆடிப் போயிருவீங்க!!

0
2 வருடங்கள் கழித்து தரமான கம்பேக் கொடுக்கும் ஏ. ஆர் முருகதாஸ்.., ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஆடிப் போயிருவீங்க!!
2 வருடங்கள் கழித்து தரமான கம்பேக் கொடுக்கும் ஏ. ஆர் முருகதாஸ்.., ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஆடிப் போயிருவீங்க!!

இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் அடுத்த இயக்கம் இருக்கும் திரைப்படம் குறித்து இணையதளத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கிய ரமணா, தீனா, கஜினி, துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற திரைப்படங்கள் இவர் கேரியரை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது. இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்து படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வரும் இவர் தற்போது மீண்டும் ஹிட் திரைப்படத்தை கொடுக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்காக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருவதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் இயக்க இருக்கும் புதிய படத்திற்கு ஹீரோவாக நடிக்கப் போகும் கதாநாயகர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் போன்று குழந்தைகள், பெண்கள் என அதிக ரசிகர்களை கொண்ட சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி போடு.., பிக்பாஸ் சீசன் 6 ல் டைட்டில் வின்னராக முடி சூட போவது யார் தெரியுமா? இது என்னடா டிவிஸ்ட்டு!!

இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், இவர்கள் இருவரும் கூடிய விரைவில் இணைவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த பிரின்ஸ் திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதால், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here