“ப்ரேமம்” போல் கோல்டு படத்தை செதுக்கும் அல்போன்ஸ்.., பட ரிலீஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
"ப்ரேமம்" போல் கோல்டு படத்தை செதுக்கும் அல்போன்ஸ்.., பட ரிலீஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

ப்ரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் இயக்கத்தில் உருவாகும் கோல்டு படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கோல்டு:

மலையாள வட்டாரத்தில் பிரேமம் என்ற அழகிய காதல் கதையை ரசிகர்களுக்கு கொடுத்தவர் தான் இயக்குனர் அல்போன்ஸ். இதை தொடர்ந்து தமிழில் நேரம் என்ற படத்தை இயக்கினார். தற்போது நடிகர் பிரித்விராஜ் வைத்து கோல்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தை நடிகர் பிரித்விராஜ் நடத்தும் பிரித்விராஜ் புரொடக்ஷன் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க மறுக்கும் அதிகாரிகள்.,, உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!!

அதாவது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here