வில்லனாக தான் நடிப்பேன்..அடம்பிடித்த அஜித் – இயக்குனரின் பகீர் தகவல்!

0

ஹீரோ கதாபாத்திரங்களை விட ரசிகர்கள் அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தினை ரசிக்க துவங்கிவிட்டனர். வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களுக்கிடையே நல்ல ரீச்சை கொடுப்பதால் திரைப்பட ஹீரோக்களே தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர். அஜித் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறார்.

வாலி, வில்லன், வரலாறு, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டார். அதிலும் அஜித் முழுவதும் வில்லனாக நடித்த மங்காத்தா திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது. அஜித்தின் 50 ஆவது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் போது முழுவதும் வில்லனாக காட்டினால் ரசிகர்கள் தொலைத்து விடுவார்கள்.

இதனால், கடைசியில் நல்லவராக காட்டிவிடலாம் என நினைத்திருக்கிறார். பின்னர், அஜித் தான் நான் நல்லவன் என்கிற பெயர் வாங்கி அரசியலுக்கு ஒன்றும் போக விரும்பவில்லை. இதனால் முழுக்க முழுக்க மங்காத்தா திரைப்படத்தில் வில்லனாகவே காட்டி விடுங்கள் என கூறியிருக்கிறார்.

இயக்குனரின் பேச்சை கேட்டு கடைசியில் அஜித்தை நல்லவராக காட்டியிருந்தால் திரைப்படம் வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. தற்போதும் அஜித் நடித்து வரும் 61 ஆவது திரைப்படத்தில் அஜித் வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here