கொரோனாவை அழிக்கும் மற்றொரு மருந்து – நாளை முதல் விநியோகம்!!

0

மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது மத்திய மற்றும் மாநில அரசு. தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டுள்ள ‘டியோக்ஸி டி குளுக்கோஸ்’ என்ற பவுடர் வடிவிலான புதிய கொரோனா தடுப்பு மருந்து இன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

புதிய கொரோனா தடுப்பு மருந்து:

கொரோனா பரவலை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ‘டியோக்ஸி டி குளுக்கோஸ்’ என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து வெற்றிகரமாக மூன்று கட்ட பரிசோதனைகளைக் கடந்துள்ளது என தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார் .


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறுதிக்கட்டமாக மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் இந்த மருந்தை வழங்கலாம். இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு இரு தினங்களுக்கு முன் இந்த மருந்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. பவுடர் வடிவிலான இம்மருந்து அவசர உதவிக்காக முதற்கட்டமாக இன்று (மே 11) அல்லது நாளை 10 ஆயிரம் பாக்கெட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. மூன்று வாரங்களில் இதன் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இம்மருந்து உடலில் வைரஸ் உற்பத்தி ஆவதை தடுக்கிறது. இம்மருந்தை எடுத்து கொண்டவர்களில் 51 சதவிகிதத்தினர் 3 நாள்களில் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாள்களில் குணமடைந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here