தினேஷ்க்கு இடமில்லை., ப்ளேயிங் 11 னில் ரோஹித் எடுத்த அதிரடி முடிவு., இந்திய அணியில் ஏற்பட்ட குழப்பம்??

0

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ப்ளேயிங் லெவனில் இந்தியா பல மாற்றங்களை செய்துள்ளது.

மிடில் ஆர்டரில் ஏற்பட்ட மாற்றம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி இன்று மொகாலியில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி ப்ளேயிங் 11னில் ரோஹித் சர்மா பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அதன்படி ப்ளேயிங் லெவனுக்கான டாப் ஆர்டரில் ரோஹித், ராகுல் களமிறங்குவது உறுதியாகிவிட்டது.

ஆனால் மிடில் ஆர்டரில் தினேஷ் மற்றும் ரிஷப் பந்தில் யார் களமிறங்க போகிறார்கள் என்ற குழப்பம் இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரிஷப் பந்தை களமிறக்க ரோஹித் முடிவு செய்துள்ளார். இதனால் இன்றைய போட்டிக்கான ப்ளேயிங் 11னில் தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. மேலும் தினேஷ் கார்த்திக் ப்ளேயிங் 11னில் களமிறங்காதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here