சஹாலுக்காக அஸ்வினை எதிர்க்கும் தினேஷ் கார்த்திக்…, டி20 உலக கோப்பையால் எழுந்த சம்பவம்!!

0
சஹாலுக்காக அஸ்வினை எதிர்க்கும் தினேஷ் கார்த்திக்..., டி20 உலக கோப்பையால் எழுந்த சம்பவம்!!
சஹாலுக்காக அஸ்வினை எதிர்க்கும் தினேஷ் கார்த்திக்..., டி20 உலக கோப்பையால் எழுந்த சம்பவம்!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின் மற்றும் சஹால் குறித்து, தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்:

இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அரையிறுதியுடன் நாடு திரும்பியது. இதன் காரணமாக, இந்திய அணி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தது. இதனால் தான், டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனை மாற்ற இருப்பதாக தகவல் வெளியானது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கு ஏற்றால் போலவே, பிசிசிஐயையும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான கேப்டனாக இருப்பார் என அறிவித்தது. இந்த அறிவிப்பால், ஹர்திக் பாண்டியா தான் இனி வரும் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சஹால் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

உலக கோப்பைக்கு பிறகு தொடங்கப்பட்ட முதல் லீக்…, போட்டிக்கு முன் மறைந்த ஜாம்பவான் பீலே-க்கு மரியாதை!!

இவர் கூறியதாவது, அஸ்வின் டி20 உலக கோப்பையின் ஆரம்ப போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சரியாக செயல்படவில்லை. இதனால், இவருக்கு பதில், யுஸ்வேந்திர சஹாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், போட்டியின் போக்கு மாறி இருக்க கூடும். மேலும், எதிரணிக்கு பல சேதங்கள் நிகழ்ந்திருக்கும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here