‘தில் பேச்சரா’ திரைப்படம் 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வைகள்..!

0

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தில் பேச்சரா திரைப்படம் 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வைகள் அப்படத்திற்கு கிடைத்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றன.

‘தில் பேச்சரா’ திரைப்படம்..!

மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படமான தில் பேச்சரா கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இத் திரைப்படத்தை யார் வேணாலும் பார்க்கலாம் என இலவச திட்டத்தை அறிவித்தனர்.

இதன் காரணமாக தில் பேச்சரா திரைப்படம் 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வைகள் அப்படத்திற்கு கிடைத்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு முன் நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் படமான எஸ்க்ட்ராக்ஷன் படம் ஒரு மாதத்தில் 99 மில்லியனை பெற்றது ஒரு சாதனையாக இருந்தது. கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரின் கடைசி சீசன் அமெரிக்காவில் மட்டும் 44 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது.அந்த சாதனையை தில் பேச்சரா திரைப்படம் 24 மணி நேரத்தில் முறியடித்துள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

தொடரும் பிரபலங்களின் தற்கொலை!! சினிமா உலகில் பரபரப்பு!!

இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் தியேட்டர்களில் வெளியிட்டிருந்தால் மிகப்பெரிய வசூல் சாதனை அடைந்திருக்கும் என பாலிவுட் விமர்சகர்கள் கருதிகின்றனர். ஒரு பார்வையை 1 டிக்கெட் என கணக்கிட்டால் 95 மில்லியன் டிக்கெட்களுக்கு 1 டிக்கெட் சராசரியாக 200 ரூபாய் என கணக்கிட்டால் கூட 1900 ரூபாய் கிடைத்திருக்கும். தில் பேச்சரா திரையரங்குளில் வெளியாகிருந்தால் பாகுபலியின் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை முந்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை மேலும் பலர் பார்த்து வருவதால் பார்வைகள் எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here