மீண்டும் மீண்டும் ருசிக்க தோணும் பாறை மீன் குழம்பு.., அதுவும் இந்த ஸ்டைல சமைத்து பாருங்க! சுவை தாறுமாறா இருக்கும்!!

0
மீண்டும் மீண்டும் ருசிக்க தோணும் பாறை மீன் குழம்பு.., அதுவும் இந்த ஸ்டைல சமைத்து பாருங்க! சுவை தாறுமாறா இருக்கும்!!
மீண்டும் மீண்டும் ருசிக்க தோணும் பாறை மீன் குழம்பு.., அதுவும் இந்த ஸ்டைல சமைத்து பாருங்க! சுவை தாறுமாறா இருக்கும்!!

பொதுவாக அசைவ வகைகளில் கடல் சார்ந்த உணவுகளில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில் ஊட்டச்சத்து அதிகம் உள்ள பாறை மீனை வைத்து ருசியாக கொஞ்சம் வித்தியாசமாக சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • பாறை மீன் – 1 கிலோ
  • தேங்காய் – 1
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் – 25 கிராம்
  • வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தக்காளி – 3
  • புளி கரைசல் – 1 கப்

செய்முறை விளக்கம்;

இந்த பாறை மீன் குழம்பு சமைப்பதற்கு நாம் வாங்கி வைத்துள்ள மீனை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து விடவும்.

இப்போது இதில் மல்லி தூள், மிளகாய் தூள், போட்டு வதக்கி விட்டு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இதோடு நாம் அரைத்து வைத்துள்ள தேங்காயை குழம்பில் ஊற்றவும். இப்போது இதில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து சிறிது கொத்தமல்லி இலைகள் போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான பாறை மீன் குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here