ஹோட்டல் ஸ்டைல் அவதி சிக்கன்.., இந்த டேஸ்ட்ல சமைச்சு பாருங்க.., கொஞ்சம் கூட மிச்சமே இருக்காது!!!

0
ஹோட்டல் ஸ்டைல் அவதி சிக்கன்.., இந்த டேஸ்ட்ல சமைச்சு பாருங்க.., கொஞ்சம் கூட மிச்சமே இருக்காது!!!
ஹோட்டல் ஸ்டைல் அவதி சிக்கன்.., இந்த டேஸ்ட்ல சமைச்சு பாருங்க.., கொஞ்சம் கூட மிச்சமே இருக்காது!!!

நம் வீடுகளில் சிக்கன் வாங்கினால் எப்போதும் போல சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு தான் சமைத்து வருகிறோம். ஆனால் இன்று கொஞ்ச வித்தியாசமாக ஹோட்டல் ஸ்டைலில் சிக்கனை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1\2 கிலோ
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
  • பெரிய வெங்காயம் -3
  • முந்திரி பருப்பு – 5
  • தயிர் – 1 கப்
  • கஸ்தூரி மேத்தி – 1 டீஸ்பூன்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்

ஹோட்டல் ஸ்டைல் அவதி சிக்கன் ரெசிபி சமைப்பதற்கு ஒரு கடாயில் 3 நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு இத்துடன் வறுத்த முந்திரி மற்றும் 1 கப் அளவுக்கு தயிர் சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சந்தியாவின் அசால்ட்டால் தீவிரவாதிகளிடம் சிக்கிய சரவணன்.., சிவகாமி எடுக்கப்போகும் முடிவு என்ன?? ராஜா ராணி 2!!!

இப்போது மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி அத்துடன் பட்டை கிராம் ஏலக்காய் போட்டு நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி அத்துடன் நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் 15 நிமிடங்கள் கழித்து சிறிதளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான ஹோட்டல் ஸ்டைல் அவதி சிக்கன் ரெசிபி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here