வித்தியாசமான முறையில் தேங்கா பூ லட்டு.., செஞ்சு பாருங்க.., குழந்தைங்கள் விரும்பி சாப்பிடுவாங்க!!

0
வித்தியாசமான முறையில் தேங்கா பூ லட்டு.., செஞ்சு பாருங்க.., குழந்தைங்கள் விரும்பி சாப்பிடுவாங்க!!
வித்தியாசமான முறையில் தேங்கா பூ லட்டு.., செஞ்சு பாருங்க.., குழந்தைங்கள் விரும்பி சாப்பிடுவாங்க!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உண்ணக் கூடியவை தான் ஸ்வீட் ரெசிபி. அப்படி பட்ட இனிப்பு பிரியர்கள் ரசித்து உண்ண கூடிய ஸ்வீட் ரெசிபி தான் இன்றைக்கு நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் துருவியது – 200 கிராம்
  • பால் – 1 கப்
  • வெள்ளை சர்க்கரை – 1 கப்
  • ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்

தேங்காய் லட்டு செய்வதற்கு 50 கிராம் அளவில் துருவிய தேங்காய் பூவை எடுத்து ஒரு கடாயில் வறுத்து தனியாக தட்டில் போட்டு உலர்த்திக் கொள்ளவும். பிறகு கடாயில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து 150 கிராம் துருவிய தேங்காய் பூவை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அத்துடன் காச்சிய பால் மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

இந்த கலவையுடன் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்து கெட்டியாக வரும் வரை வதக்கி அடுப்பை ஆப் செய்யவும். ஒரு 10 நிமிடம் கழித்து நாம் வதக்கி வைத்துள்ள இந்த தேங்காய் பூரெசிபியை லட்டு பிடித்து, நாம் உலர்த்தி வைத்துள்ள தேங்காய் பூவோடு உருட்டி கொள்ளவும். இப்பொழுது நமக்கு சுவையான தேங்காய் பூ லட்டு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here