அடிக்கும் குளிருக்கு காரசாரமான மிளகாய் கோழி வறுவல்.., ருசி அள்ளும்.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

0
அடிக்கும் குளிருக்கு காரசாரமான மிளகாய் கோழி வறுவல்.., ருசி அள்ளும்.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!
அடிக்கும் குளிருக்கு காரசாரமான மிளகாய் கோழி வறுவல்.., ருசி அள்ளும்.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவுகளில் ஒன்று சிக்கன் ரெசிபி. இந்த சிக்கன் ரெசிபியை கிராமத்து முறைப்படி எளிமையான முறையில் எந்த மசாலாவும் பயன் படுத்தாமல் சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1/2 கிலோ
  • மிளகாய் வத்தல் – 5
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

செய்முறை விளக்கம்:

கிராமத்து ஸ்டைலில் சிக்கன் மிளகாய் கறி ரெசிபி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம், மிளகாய் வத்தல் போட்டு தாளித்து விடவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

இப்பொழுது நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை இதோடு சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து கடாயை மூடி போட்டு மூடவும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை ஆப் செய்யவும். இப்போழுது நமக்கு சுவையான சிக்கன் மிளகாய் கறி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here