ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வித்தியாசமான சிக்கன் புக்காரா… இத ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!!

0

அசைவ பிரியர்களின் முதல் சாய்ஸாக இருப்பது சிக்கன் தான். ஏனென்றால் அதில் வித விதமான உணவு வகைகளை செய்யலாம். மேலும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பிரியமான ஒரு உணவுப் பொருள். அப்படிப்பட்ட அனைவரின் விருப்ப உணவான சிக்கன் வைத்து மிகவும் வித்தியாசமான   சிக்கன் புக்காரா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 750 கிராம்

கெட்டியான தயிர் – 1/2 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பாதம் மற்றும் முந்திரி விழுது – 1 தேக்கரண்டி

சோள மாவு – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் அந்த சிக்கன் உடன் இஞ்சி பூண்டு விழுது,கெட்டியான தயிர்,உப்பு மற்றும் சோள மாவு சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். அதை 2 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளவும். இதையடுத்து உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

அதில் தக்காளி கலவை அல்லது தக்காளி பியூரி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் அளவில் வதக்க வேண்டும். அதன் பின்னர் பாதாம் மற்றும் முந்திரி விழுது சேர்த்து நன்றாக வதங்கி கொள்ள வேண்டும். இந்நிலையில் வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கனை மிதமான தீயில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பொரித்து வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை கிரேவியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை நன்றாக வேக விட வேண்டும். அதன் பின்னர் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி விடவும். தற்போது சுவையான மணமிக்க ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் புக்காரா தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here