இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அரை மணிநேரத்தில் ரெடியாகும் இரண்டு வகை ஸ்நாக்ஸ்… உடனே வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

0
இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அரை மணிநேரத்தில் ரெடியாகும் இரண்டு வகை ஸ்நாக்ஸ்... உடனே வீட்டில செஞ்சு அசத்துங்க!!!
இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அரை மணிநேரத்தில் ரெடியாகும் இரண்டு வகை ஸ்நாக்ஸ்... உடனே வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டே பொழுதை கழிப்பதில் பலருக்கு கொள்ளை பிரியம் இருக்கும். அதுவும் மாலை நேரத்தில் டீ மற்றும் காபி உடன் என்றால் கேட்கவா வேணும். அப்படிப்பட்ட ஸ்னாக்ஸ் வீட்டிலேயே செய்வது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருப்பினும் வீட்டில் ஸ்நாக்ஸ் செய்வதில் ஆர்வம் உடையவர்களா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். இதில் மைதா என்ற ஒரே ஒரு பொருளை வைத்து எவ்வாறு இரண்டு ஸ்நாக்ஸ் ஐட்டம் செய்வது என்பதை காண உள்ளோம்.

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 1

ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

சீனி – 1 கப்

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அரை மணிநேரத்தில் ரெடியாகும் இரண்டு வகை ஸ்நாக்ஸ்... உடனே வீட்டில செஞ்சு அசத்துங்க!!!
இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அரை மணிநேரத்தில் ரெடியாகும் இரண்டு வகை ஸ்நாக்ஸ்…

செய்முறை:

இனிப்பு கல காலா

முதலில் மைதா மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து அதை சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு கலவையை சிறிது நேரம் ஊற விட வேண்டும். இந்நிலையில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சீனி, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும். அதன் பின்னர் அதை மாவு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு உருண்டையும் மெல்லிய சப்பாத்தியாக போட்டு கொள்ளவும். அதன் பின்னர் கத்தியின் உதவியால் அதை டைமண்ட் உருவில் கட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் ஒன்றின் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொரித்து எடுத்து வைத்து உள்ள கல காலாவில் சீனி பாகை சேர்த்து நன்றாக குலுக்கி கொள்ள வேண்டும். தற்போது சுவையான ஈஸியான இனிப்பு கல காலா ரெடி.

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அரை மணிநேரத்தில் ரெடியாகும் இரண்டு வகை ஸ்நாக்ஸ்... உடனே வீட்டில செஞ்சு அசத்துங்க!!!
இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் அரை மணிநேரத்தில் ரெடியாகும் இரண்டு வகை ஸ்நாக்ஸ்…

கார கல காலா

மைதாவில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு கலவையை சிறிது நேரம் ஊற விட வேண்டும். அதன் பின்னர் அதை மெல்லிய சப்பாத்தியாக போட்டு கொள்ளவும். இதையடுத்து அந்த சப்பாத்திகளை டைமண்ட் உருவில் கட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் ஒன்றின் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது சுவையான ஈஸியான கார கல காலா ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here