ஈஸியான வித்தியாசமான அவல் துவையல்… மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!!

0

தினமும் காலையில் என்ன செய்யவேண்டும் என்பது பெரிய குழப்பமான ஒரு விஷயம். மேலும் தோசை, இட்லி, பூரி, சப்பாத்தி என பழைய உணவுகளையே செஞ்சு போர் அடித்துவிட்டதா? அப்பொழுது இந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ள அவல் துவையல் செய்து அசத்துங்க.

தேவையான பொருட்கள்

அவல் – 1/2 கிலோ

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 4

கடுகு – 1 தேக்கரண்டி

உளுந்தும் பருப்பு – 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 2

புளி – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் தேங்காய் துருவல், புளி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அவலை நன்கு கழுவி சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும். அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,  மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ளவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தண்ணீர் வடிகட்டி எடுத்து வைத்து உள்ள அவலை சேர்த்து அதில் உப்பு போட்டு நன்றாக வதங்கி கொள்ளவும். பிறகு தேங்காய் கலவையை அதில் சேர்த்து கிளறி கொள்ளவும். அதன் பின்னர்  அவல் மற்றும்  தேங்காய் கலவை ஒன்றோடு ஒன்று சேருமாறு கிளறிக்கொண்டு பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி விடவும். தற்போது சுவையான வித்தியாசமான அவல் துவையல் தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here