Friday, March 29, 2024

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயாபர்களில் விஷப்பொருள் கலப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

Must Read

இன்றைய அவசரமான உலகில் அனைத்து மாடர்ன் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிப்பது வழக்கமாகி விட்டது. அதில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் கலந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாடர்ன் டயாபர்கள்:

அவரசரமான இந்த உலகில் குழந்தைகளை பாரம்பரிப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக கருதப்படுகிறது. குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை துணியினை மாற்றும் நிலை உள்ளதால் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு நவீன டயாபர்களை பயன்படுத்துவர். இதனால் குழந்தைகள் சீறுநீர் கழித்தாலும் ஈரமாகாது. இதனால் பல “மாடர்ன்” அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதனை அணிவிப்பர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சிலர் ஒரு நாள் முழுவதும் கூட இதனை பயன்படுத்துவர். அவர்கள் துணியினை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றும் சுத்தமாக இருக்காது என்றும் கருதுகின்றனர். ஆனால், இது போல் டயாபர்களை அணிவிப்பதால் குழந்தைகளுக்கு தீங்கு உண்டாகும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டயாபர்களில் விஷப்பொருள் கலந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல்:

டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டது. அவரகள் பல மாதிரிகளை எடுத்து கொண்டனர். அதில் அவர்களுக்கு பல அதிர்ச்சிகரமான முடிவுகள் தெரியவந்துள்ளது. அவர்கள் முடிவாக கூறப்பட்டுள்ளதாவது “குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக விற்கப்படும் இந்த டயாபர்களில் ப்தலேட் எனப்படும் விஷப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.”

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு ரூ. 25 லட்சம் செலவு செய்த நயன்தாரா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

“இவை குழந்தைகளின் உடல் நலனை பெரிதும் பாதிக்கும். சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் தாய்மார்கள் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

டயாபர்களில் இது போன்ற வேதிப்பொருளை பயன்படுத்த சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -